சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகளின் போராட்டம் தீவிரமாகி இருக்கிறது. 'கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடாததால் குறுவையும் தாளடியும் பொய்த்து போய்விட்டது. சம்பாவுக்காவது கர்நாடக அரசு தண்ணீர்திறந்துவிடவேண்டும்" என்ற கோரிக்கையோடு தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் தங்களின் நிலையை வெளிப்படுத்தி வருகிறார்கள் விவசாயிகள்.
திருச்சியில் கடந்த சில தினங்களாக டெல்டா விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த 29ந்தேதி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 70க்கும் மேற்பட்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் கே.எஸ் பழனிச்சாமியை சந்தித்து மனு கொடுத்தனர். காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகா அரசை கண்டித்தும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் தொடர் உண்ணாவிரதம் இருக்க அனுமதியும் கோரினர். விவசாயம் பொய்த்துபோவதால் நகை நட்டுகளை எல்லாம் இழந்து விட்டதை சுட்டி காட்ட தாலி அறுப்பு போராட்டத்தையும் நடத்த திட்டமிட்டதாக சொன்ன விவசாயிகள், உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி கலெக்டர் காலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
தொடர் உண்ணாவிரதப்போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட, தங்களது மேற்சட்டைகளை கழற்றிவிட்டு அரை நிர்வாணமாக வாயிலில் அமர்ந்து போராட்டமும் நடத்தினர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, பிறகு 6 நாட்கள் வரை தொடர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 30ம் தேதி முதல் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
தங்களது கைகளை கட்டிக்கொண்டு, மண்வெட்டியில் தூக்கு மாட்டிக்கொண்டு, விவசாயிகள் பிணக்கோலம் தரித்து.. என ஒவ்வொரு நாளும் வித்தியாசமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். உண்ணாவிரத களத்தில் விவசாயி ஒருவர் மரணித்தது போல சடலம் போல் படுத்திருக்க சுற்றி அமர்ந்தவர்கள் ஒப்பாரி வைத்து அழுதபடி காவிரியில் நீர் திறக்கச்சொல்லி போராடியது காண்பவர்களை கலங்க வைத்தது.

இது தொடர்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணுவிடம் பேசினோம். "உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் கூட, கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டிய மத்திய அரசு அதை செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது. நதிகளை இணைப்போம் என சொல்லி ஆட்சிக்கு வந்த பிஜேபி, அதை செய்ய மறுக்கிறது. சரி தண்ணீரை திறந்துவிடாமல் அதில் அரசியல் செய்ய நினைக்கிறது. தமிழகத்தில் தனது ஆட்சியை பிடிக்க வேண்டும் என கனவுகாணும் பிஜேபியின் கனவு நிறைவேறாது என நினைக்கும் பிஜேபி, தமிழகத்தை வஞ்சிக்கிறது. அதேபோல் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க காவிரியை வைத்து பாலிடிக்ஸ் பண்ண நினைக்கிறது. சமீபத்தில் கர்நாடக அமைச்சர், கடந்த வருடத்தைவிட 10சதவிகிதம் குறைவாக மழை பொய்துள்ளது என கூறுகிறார். அப்படியானால், கடந்தவருடம் வழங்கியதைவிட கொஞ்சம் குறைத்து 50%தண்ணீரை கொடுக்கலாம் ஆனால் தர மறுக்கிறது. இதை இந்திய பிரதமர் மோடியும் வேடிக்கை பார்க்கிறார். இவற்றை கலைய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நீர் பங்கீட்டு குழு அமைக்க வேண்டும், அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம்.
மன்னர் ஆட்சிகாலத்தில் கூட கீழை நாட்டுக்கும்,மேலை நாட்டுக்கும் சண்டைகள் நடந்தபோதும் தண்ணீரை தடுக்கவில்லை. ஆனால் ஜனநாயக நாட்டில் பக்கத்து மாநிலத்துக்கு தண்ணீர் தரமறுப்பது எந்த நியாயம், இதையெல்லாம் கண்டித்து முதல் நாள் விவசாயிகளின் கைகளை கட்டி போட்டுவிட்டார்கள் என உணர்த்த கைகளை கட்டியும், கை கால்களை கட்டிப்போட்டுவிட்டார்கள் என காலை கட்டியும், தற்கொலை செய்வதைதவிர வழியில்லை என தூக்கில் தொங்கும் போராட்டமும், இன்று தற்கொலை செய்துகொண்ட விவசாயியை பிணமாக வைத்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்திவருகிறோம். எங்கள் போராட்டத்திற்கு ஆளுங்கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் ஆதரவளித்து வருகிறார்கள். எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை தொடர்ந்து அடுத்தடுத்த போராட்டங்களை முன்னெடுப்போம்," என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.