சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக படியேறி புகார் கொடுத்துள்ளார் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளர் ஹசினா சையத். அவர் கொடுத்த புகாரில் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஹசினா சையத் கூறுகையில், "காங்கிரஸ் நிர்வாகிகள் சேர்ந்து ஃபேஸ்புக்கில் காங்கிரஸ் முகநூல் நண்பர்கள் என்ற குரூப்பில் 1500க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறோம். இந்த குரூப்பில் பல தகவல்களை பரிமாறிக் கொள்வது வழக்கம். கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சென்னை பாரிமுனையில் ஃபேஸ்புக் காங்கிரஸ் நண்பர்கள் நேரில் சந்தித்து பேசினோம். அந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்தோம். இந்த சமயத்தில் ஹரிமணி என்ற பெயரில் அந்த புகைப்படங்களுக்கு இரட்டை அர்த்தம் கொண்ட பதிவு போடப்பட்டிருந்தது. அடுத்து அந்த ஃபேஸ்புக் ஐ.டி.யிலிருந்து பிரபலமான பெண்கள் குறித்து அவதூறு தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியிலிருக்கும் பெண் பிரபலங்களின் போட்டோக்கள் மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டன. இது தொடர்பாக ஹரிமணி என்ற பேஸ்புக் ஐ.டி யாருடையது என்று விசாரித்த போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாலகிருஷ்ண பட்டாபி என்பது தெரியவந்தது. அவரை ஃபேஸ்புக் மூலம் எச்சரித்தப்பிறகும் தொடர்ந்து பெண்களை குறித்த அவதூறு பரப்புவதை நிறுத்தவில்லை. இதையடுத்து நான் மற்றும் காங்கிரஸ் ஃபேஸ்புக் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளோம். சமூகத்தில் பெண்களை இவ்வாறு சித்தரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்குரிய சட்டம் நம்நாட்டில் இல்லை. குறிப்பாக ஃபேஸ்புக் ஐ.டி முடக்க கூட வழியில்லை" என்றார் ஆதங்கத்துடன்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "ஹசினா சையத், சையத் முகமது ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் குற்றம் சுமத்திய பேஸ்புக் ஐ.டி.யை முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், போதிய ஆதாரங்கள் கிடைத்தவுடன் குற்றம் சுமத்தப்பட்டவர் கைது செய்யப்படுவார். இந்த வழக்கில் வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. போலி ஐ.டி மூலம் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.