Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 8, 2016

சென்னையில் போலி சி.பி.ஐ. அதிகாரி கைது! பரபரப்பு பின்னணி


விடுதியில் தங்கியுள்ள இளம்பெண்களிடம் பாலியல் முறைகேடு புகாரில், திருவான்மியூரில் கைது செய்யப்பட்டவர் போலி சிபிஐ அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.மேலும் அவர் மீது பணம் பறித்தல்,பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றப் புகார்கள் அணிவகுத்து நிற்பதால் சென்னை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
         
சென்னை பெசன்ட் நகர் டி.எம். மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், முதல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு தாமோதரன் என்ற மகன் உள்ளார். இவர்கள் வசிக்கும் வீட்டின் கீழ் தளத்தில் பெண்கள் விடுதி ஒன்று உள்ளது.

இந்நிலையில், முதல் தளத்தில் வசித்து வரும் தாமோதரன், இரவு நேரத்தில் கீழ் தளத்தில் உள்ள பெண்கள் விடுதிக்கு அடிக்கடி சென்றுள்ளார். மேலும் அங்கு மறைந்து இருந்து, பெண்கள் குளிக்கும்போது செல்போனில் படம் பிடித்தார் என்று புகார் எழுந்தது.அதனையடுத்து அந்த விடுதியில் தங்கியுள்ள இளம்பெண்கள், விடுதி ஊழியர் காவேரியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த காவேரி, பெண்களின் புகார் பற்றி தாமோதரனிடம் விசாரித்துள்ளார்.

அப்போது தாமோதரன்," நான் சிபிஐ அதிகாரி என்று தெரிந்தும் என்னிடமே கேள்வி கேட்கிறாயா" என மிரட்டியுள்ளார். அத்தோடு, இதுபோன்ற கேள்விகளை கேட்டால், உங்களை எல்லாம் நான் சிறையில் தள்ளிவிடுவேன் என்றும் எச்சரித்துள்ளார்.

இதில் பயந்துபோன காவேரி,  திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில், தாமோதரனை நேரில் வரவழைத்து விசாரணை செய்துள்ளனர் போலீசார்.அப்போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தாமோதரன் கூறியுள்ளார். இதனால் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை செய்த போலீசார், அவர் கூறிய தகவல்களைக் கேட்டு அதிர்ந்தனர்.

விசாரணை குறித்து போலீசார் கூறுகையில்,

" தாமோதரன், தான் சிபிஐயில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பதாக போலியாக அடையாள அட்டையை தயார் செய்து சுற்றி வந்துள்ளார். மேலும், அவர் வைத்துள்ள காரில் சைரன் பொருத்தப்பட்டு அதிகாரி போல் வலம் வந்துள்ளார். பல பெண்களை மிரட்டி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களிடம் பணமும் பறித்துள்ளார்.

மேலும், பல நிறுவனங்களில் நண்பர்களுடன் சேர்ந்து சிபிஐ அதிகாரி போல் நடித்து சோதனை செய்வதாக பல லட்சம் பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுபோல் மோசடியாக சம்பாதித்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

வீட்டில் பெற்றோரிடம் எனக்கு அரசு வேலை கிடைத்துள்ளது என்று கூறி ஏமாற்றி வந்துள்ளார். பல இடங்களில் இவர் மோசடியில் ஈடுபட்டுள்ளதால் அவரின் தொடர்பில் யார் யார் இருக்கிறார்கள் என்றும், அவரின் மோசடி நெட் ஒர்க் குறித்தும் தாமோதரனிடம் தீவிரமாக விசாரித்து வருகிறோம்" என்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.