தனியார் வங்கியின் பெயரில் சில எழுத்துகளைச் சேர்த்து, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘எஸ்’ வங்கி என்ற பெயரில் தனியார் வங்கி ஒன்று கம்பெனி பதிவுச் சட்டத்தில் பதிவு செய்து, கடந்த 2004 முதல் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று நாடு முழுவதும் கிளைகள் அமைத்துச் செயல்பட்டு வருகிறது. இதே பெயரில் 'ஏபிஎஸ்' என்ற எழுத்துக்களை நடுவில் சேர்த்துக் கொண்டு, ‘எஸ் ஏபிஎஸ் வங்கி' என்ற பெயரில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி எதிரே ஒரு வங்கிக் கிளை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகச் செயல்பட்டு வந்துள்ளது.
இந்த தகவல் அறிந்த ‘எஸ்’ வங்கியின் சேலம் கிளை மேலாளரும், துணைத் தலைவருமான சசிக்குமார், கடந்த மாதம் இந்த போலி வங்கிக் கிளைக்கு சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது, தங்களது வங்கிப் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களைச் சேர்த்து வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி வசூலித்து வருவது தெரிய வந்திருக்கிறது.
இதையடுத்து, தங்கள் வங்கியின் பெயரையும், குறியீட்டையும் பயன்படுத்தி தருமபுரியில் வங்கி என்ற பெயரில் போலி நிறுவனம் செயல்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளிடம் சசிகுமார் புகார் அளிக்க, அது தருமபுரி மாவட்டக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இதை தொடர்ந்து, தருமபுரி மாவட்ட குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர், தீவிர விசாரணை மேற்கொண்டு நேற்று 4 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும்போது, ''இந்த வழக்கில் பென்னாகரம் கூர்க்காம்பட்டியைச் சேர்ந்த சோமசுந்தரம் (31), பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த பாலாஜி (24), நாமக்கல் மாவட்டம், தடங்கானூரைச் சேர்ந்த சுந்தரேசன் (22), இலக்கியம்பட்டியைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் முருகேசன் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், இதே வழக்கில் தொடர்புடைய நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயபிரபுவைத் தேடி வருகிறோம். இவர்கள் மீது 120 பி, 465, 468, 471, 482, 489, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘எஸ்’ வங்கியில், வங்கித் தொடர்பாளர் என்ற பெயரில் முகவரைப் போல் பணிக்கு சேர்ந்து பயிற்சி பெற்ற சோமசுந்தரம், அதற்கான சிறிய தொகையை வைப்பு நிதியாகவும் ‘எஸ்’ வங்கிக்குச் செலுத்தியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, ‘எஸ்’ வங்கியின் பெயரில் சிறிய மாற்றங்களைச் செய்து, ஒரு போலி வங்கியை உருவாக்கியிருக்கிறார். அதற்காக எல்லா வகையான ஆவணங்களையும் அச்சிட்டு, வங்கிக் கிளைக்கான உள்கட்டமைப்பு ஏற்பாடுகளையும் அவர்கள் செய்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்துக்குள், 83 வாடிக்கையாளர்களைச் அவர்கள் சேர்த்து ரூ.1.60 லட்சம் வசூலித்துள்ளனர். இந்த போலி வங்கிக்கு சோமசுந்தரம் தலைமைச் செயல் அலுவலராகவும், பாலாஜி விற்பனைப் பிரிவுப் பணியாளராகவும் இருந்துள்ளனர்" என்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அதுவும் பரபரப்பான இடத்தில் போலியான வங்கி ஒன்று செயல்பட்டு வந்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.