Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 21, 2016

இந்திய மாணவருக்கு 10.70 லட்சம் பரிசளித்த ஃபேஸ்புக்..ஏன்?


சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் உள்ள முக்கிய குறைபாட்டை கண்டுபிடித்த இந்திய மாணவர் அருண்குமாருக்கு 10.70 லட்சம் பரிசை அறிவித்துள்ளது ஃபேஸ்புக் நிர்வாகம். கேரளமாநிலம் , சாத்துனூரில் உள்ள எம்.இ.எஸ் இன்ஸ்டிட் ஆப் டெக்னாலஜி & மேனேஜ்மெண்ட் கல்லூரியில், கம்யூட்டர் சயின்ஸ் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்தான் இந்த அருண்குமார்.

நம் அனைவரின் மத்தியிலும் பரவலான பயன்பாட்டில் இருக்கும்  சமூகவலைதளங்களில் ஃபேஸ்புக்கும் ஒன்று.  ஃபேஸ்புக்கில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டுபிடித்து நீக்குவதற்காக,  Bug Bounty programme என்ற குறைகளை சுட்டிக்காட்டும் திட்டத்தை 2011 முதல் செயல்படுத்தி வருகிறது ஃபேஸ்புக் நிர்வாகம். இதன் மூலம் பல ஹேக்கர்களும் கலந்து கொண்டு  ஃபேஸ்புக் பக்கத்திலுள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி பரிசுகளை பெற்று வருகின்றனர். அருண்குமாரும் அதில் ஒருவர். ஃபேஸ்புக்கின், பிசினஸ் மேனேஜரில், ஹேக்கர்கள் 10 நொடிக்குள் ஹேக் செய்துவிட முடியும் ஒரு குறைபாட்டைக் கண்டுபிடித்து ஃபேஸ்புக் நிர்வாகத்திற்கு ஆகஸ்ட் 29-ம் தேதி இ.மெயில் மூலம் தெரிவித்துள்ளார். இந்தக் குறைபாட்டை ஆராய்ந்து அடுத்தநாளே  முழுமையாக சரி செய்துள்ளது ஃபேஸ்புக் நிர்வாகம். இக் குறைபாட்டை தடுக்காவிட்டால், பிசினஸ் மேனேஜரில் உள்ள தகவல்கள் மூலம் இணைய முறைகேடுகளில் ஈடுபட்டிருக்க முடியுமாம். குறைபாட்டை சுட்டிக்காட்டி முன்னெச்சரிக்கையாக ஃபேஸ்புக் நிர்வாகத்திற்கு தெரிவித்ததால், செப்டம்பர் 9-ம் தேதி 16 ஆயிரம் டாலர், அதாவது இந்திய பண மதிப்பில், 10.70 லட்ச ரூபாய் பரிசை அறிவித்தது ஃபேஸ்புக் நிர்வாகம்.

 இப்படி பரிசு பெறுவது அருண்குமாருக்கு இது முதல்முறை அல்ல. கூகுள், ஃபேஸ்புக் ஆகிவற்றின் குறைகளை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி, கடந்த மூன்று வருடங்களில் இதுவரை 30.85 லட்ச (46ஆயிரம் டாலர்கள்) ரூபாய் பரிசு பெற்றுள்ளார்.  கடந்த ஆகஸ்ட் மாதம்  அமெரிக்காவிலுள்ள லாஸ்வேகஸ் என்ற இடத்தில் நடைபெற்ற பாதுகாப்பு உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் ஃபேஸ்புக் பாதுகாப்பிற்கு உதவிய ஹேக்கர்களை அழைத்து பாரட்டியுள்ளது ஃபேஸ்புக் நிர்வாகம். அதில், ஃபேஸ்புக் பாதுகாப்பு குழு, அருண்குமாருக்கு பத்தாவது இடம் அளித்துள்ளது. இந்தியாவில் இருந்து இதற்காக கெளரவப்படுத்தப்பட்ட ஒரே இந்தியர் இவரே. கேரள மாநிலம் கொல்லம் அருகிலுள்ள முண்டக்கால்தான் இவரது சொந்த ஊர். இதுவரை பரிசாகப் பெற்ற பணத்தை வைத்து அமெரிக்காவில் உயர்படிப்புச் செலவுக்காக பயன்படுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.