உத்தரபிரதேசத்தில் மகா யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, யானை பணத்தை தின்றுவிட்டது, சைக்கிள் பஞ்சராகி விட்டது என்று பகுஜன்சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளை தாக்கி பேசினார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என காங்கிரஸ் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித்தை அறிவித்து, பிரசாரத்தையும் காங்கிரஸ் கட்சி தொடங்கி விட்டது.
மேலும்,. உத்தரப் பிரதேசத்தின் தியோரியா பகுதியில் இருந்து கடந்த 6-ந் தேதி டெல்லி நோக்கி 2,500 கி.மீ. தூரத்துக்கு மகா யாத்திரை மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி. இந்த யாத்திரையின் 6-வது நாளான நேற்று, சமாஜவாதி தலைவர் முலாயம் சிங்கின் சொந்தத் தொகுதியான அசம்காரில் அவர் யாத்திரை மேற்கொண்டார். அப்போது, அந்தப் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றும்போது, ''உத்தரப் பிரதேசத்தில் முன்பு ஆட்சியில் இருந்த யானை (பகுஜன் சமாஜ் சின்னம்), மக்கள் அனைவரின் பணத்தையும் தின்றுவிட்டது. இதனால் அதை நீங்கள் துரத்தியடித்து விட்டீர்கள்.
இதை தொடர்ந்து, சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னத்துக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தீர்கள். ஆனால், அந்த சைக்கிள் ஓடாமல் ஒரே இடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கிறது. அந்த சைக்கிளின் டயர் பஞ்சராகி விட்டது. இதனால் அந்த சைக்கிளால் ஓட முடியவில்லை. உத்தரப் பிரதேச மக்களுக்கு சமாஜ்வாதி கட்சி, குடும்ப அட்டையைக் கூட வழங்கவில்லை. அதனால், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நீங்கள் கையைப்பற்றி (காங்கிரஸ் தேர்தல் சின்னம்) சிந்திக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதன்பின், குடும்ப அட்டை, விவசாயிகள் விவகாரத்தில் காங்கிரஸ் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நீங்கள் காணலாம்" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.