சமீபத்தில் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல். இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கையால் பள்ளி கிரிக்கெட்டில் விருது வாங்கும் பால் வடியும் முகம் கொண்ட சிறுவன் 10 வருடத்தில் ஆஷிஷ் நெஹ்ராவை ஆன் சைடில் நிற்காதீர்கள், கொஞ்சம் நகர்ந்து நில்லுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும்?. அந்த சிறுவன் தான் இந்திய அணிக்கான அண்டர் 19 உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டன். இந்திய அணிக்கு என்ட்ரி கொடுத்த சிறுவனுக்கு 6 வருடங்களில் அடுத்த சச்சின் என்ற பெயர்.
இந்தியாவின் அக்ரஸிவ் டெஸ்ட் கேப்டனின் இதுவரையிலான பயணம் ''ட்ரிவன் - தி விராட் கோலி ஸ்டோரி'' என்ற பெயரில் புத்தகமாக வெளிவர உள்ளது. விஜய் லோகபல்லி இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். இவர் ஆறு உலகக் கோப்பைகளில் இந்திய அணியை தொடர்ந்து செய்திகளை சேகரித்தவர்.
மஹேந்திர சிங் தோனியின் பயோபிக் மற்றும் புத்தகம் ரிலீஸ் ஆகும் அதே நேரத்தில் (அக் 1) தான் இந்த புத்தகமும் வெளியாகிறது. இதில் பல சர்ச்சைகள், கோலியின் அபார வளர்ச்சி என பல விஷயங்களை உள்ளடக்கியது என கூறப்படுகிறது. டெல்லியில் தன் தந்தை மரணித்த போது அடித்த அந்த 90 ரன்கள். ஆக்ரோஷமாக ரசிகர்களிடன் ரியாக்ட் செய்தது, தனது டெல்லி மேட் மற்றும் உலகக் கோப்பையை வென்று தந்த பார்ட்னர்ஷிப்புக்கு காரணமான கம்பீருடன் ஐ.பி.எல் போட்டிகளில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்த சர்ச்சை. 2012ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் அனுஷ்கா ஷர்மாவுடன் ஒன்றாக ஹோட்டலில் தங்கியது. ஷாப்பிங் சென்றது, ஃபார்மில் இல்லாதது என வரிசையான சர்ச்சைகள். 2016ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஆஸியை வென்று ட்விட்டரில் 'SHAME' பதிலடி தந்தது என சர்ச்சைகளை சாதனைகளாக மாற்றிய உலகின் தலைசிறந்த வீரரின் வாழ்க்கையை இந்த புத்தகம் பதிவு செய்துள்ளது என தெரிகிறது.
சிட்னி மைதானத்தில் ரசிகர்களை நோக்கி நடுவிரலை காட்டிய இளம் வீரர் தான் இன்று மிஸ்டர் பொறுப்பாக இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்துகிறார்.
மிஸ்டர் அக்ரஸிவ், உலகின் சிறந்த வீரர் இவரது வாழ்க்கையை இந்த புத்தகம் உணர்த்தும். ஜென் Xக்கு சச்சின், ஜென் Yக்கு தோனி என்றால், ஜென் Zக்கு கோலி தான்...

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.