தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் நிலையை மாற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்திற்கு காவிரியில் 10 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நள்ளிரவு 12 மணியளவில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீரையும் கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டதை எதிர்த்து, கிருஷ்ணராஜசாகர் அணை அருகே கர்நாடக விவசாயிகள் தீப்பந்தங்களை ஏந்தி அணைகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 100 பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இது தொடர்பான போராட்டங்கள் கடந்த 2 நாட்களாக கர்நாடகாவில் தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில், தமிழக விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வுகாண, வரும் மழைக்காலத்திற்குள் அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரி, வரமாக கடவுள் நமக்கும் தரும் மழையை சேமித்து விவசாயத்திற்கும், குடி தண்ணீருக்கும் அண்டை மாநிலத்திடம் கையேந்தும் நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் பிரச்னையை நாட்டின் முக்கிய பிரச்னையாக எடுத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் நமது நதிகளை இணைப்பதன் மூலமே நிரந்தர தீர்வு ஏற்படும் என்று விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் நாள்தோறும் 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, கர்நாடக அரசு தண்ணீர் திறந்துள்ளது. ஒவ்வொரு வருடமும், இந்த மாதங்களில் கர்நாடகத்திடம் காவிரியில் தண்ணீர்விட போராடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் காவிரி நீர் தமிழக விவசாயிகளுக்கு கானல் நீராகவே மாறி விடும். இது இரு மாநில பிரச்னையாக இருப்பதால், யாரையும் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டும். விவசாயிகள் தங்கள் பிரச்னையை தொடர்ந்து வலியுறுத்தியும், தமிழக அரசு வாயே திறக்காமல் மவுனம் சாதிப்பது வேதனையளிக்கிறது.
அமைச்சர் கருப்பண்ணன் பொது கூட்டத்தில் பேசும்போது, தமிழக விவசாயிகள் கோடீஸ்வரர்களாக இருப்பதாக பேசி இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல் உள்ளது. அமைச்சரின் பேச்சு மிகவும் கண்டனத்துக்குரியது. இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான். ஆனால் நமது விவசாயிகள் வறுமையிலும், கடனிலும், ஏழ்மையிலும் இருப்பது நமது நாட்டுக்கே தலைகுனிவு.
தமிழக விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வுகாண வரும் மழைக்காலத்திற்குள் அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரி, வரமாக கடவுள் நமக்கும் தரும் மழையை சேமித்து விவசாயத்திற்கும், குடி தண்ணீருக்கும் அண்டை மாநிலத்திடம் கையேந்தும் நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் பிரச்னையை நாட்டின் முக்கிய பிரச்னையாக எடுத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் நமது நதிகளை இணைப்பதன் மூலமே நிரந்தர தீர்வு ஏற்படும். மாநிலங்களுக்கிடையே இருக்கும் தண்ணீர் பிரச்னை, மாநிலங்களுக்கிடையேயான மக்கள் பிரச்னையாக மாறாமல் தடுக்கப்படவேண்டும்.
ஏற்கனவே குறுவை, சம்பா சாகுபடி பொய்த்து போன நிலையில், மாநிலங்கள் தண்ணீர் பிரச்னையை அரசியலாக்காமல் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று கூறி உள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.