Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 15, 2016

முழு கடை அடைப்புப் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு! - கருணாநிதி


சென்னை: தமிழகத்தில் 16-ம் தேதி நடைபெறும் முழு கடை அடைப்புப் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று கருணாநிதி தெரிவித்து உள்ளர்.

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுபடி தமிழகத்திற்கு உரிய நீரை காவிரியில் திறந்துவிட வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழ்நாட்டுக்கு எதிராக நடந்துவரும் வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு அமைக்க வலியுறுத்தியும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் செப்டம்பர் 16--ம் தேதி அன்று தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காவிரி நீர்ப் பிரச்னையில் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முழு கடையடைப்புப் போராட்டம் நடத்திட தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு லாரி உரிமையாளர்களின் சம்மேளனம், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓட்டல் உரிமை யாளர்கள் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

இந்த முழு கடை அடைப்புப் போராட்டத்திற்கு தி.மு.கழகத்தின் ஆதரவினை அந்த அமைப்புகளின் சார்பில் கோரப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கையினை ஏற்று வரும் 16-ம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள முழு கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தருவதென திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய்திருக்கிறது. அதனால், தி.மு.கழகத்தின் உடன்பிறப்புகள் அனைவரும் இந்தப் போராட்டத்திற்கு தங்களின் முழு ஆதரவினைத் தந்து, போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.