மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது அ.தி.மு.க தலைமை. ' வார்டுகளில் பணத்தை வாரியிறைப்பவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கும் முடிவில் இருக்கிறது தி.மு.க தலைமை. இதனால் கட்சியின் தீவிர விசுவாசிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது' எனக் கலங்குகின்றனர் உடன்பிறப்புகள்.
உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து, பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றும் முடிவில் இருக்கிறார் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின். இதற்காக, மாநிலம் முழுவதும் 28 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாத மேற்பார்வையாளர்களே நியமிக்கப்பட்டனர். மாவட்ட செயலாளர்களின் பரிந்துரைகளை ஒருபுறத்தில் வைத்துக் கொண்டே, மேற்பார்வையாளர்கள் சொல்லும் தகுதியான வேட்பாளர்களை இறுதி செய்ய உள்ளது தி.மு.க தலைமை. இதனால் மாநிலம் முழுவதும் தி.மு.க தொண்டர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய சென்னை மாவட்ட தி.மு.க நிர்வாகி ஒருவர்,
" வார்டுகளில் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செலவு செய்யக் கூடிய வேட்பாளர்கள்தான் கட்சித் தலைமையின் முதல் சாய்ஸ். அதற்கேற்ப, ஒவ்வொரு பகுதிக் கழக செயலாளரும் மூன்று பேரை பரிந்துரை செய்ய வேண்டும். அந்த மூன்று பேரும், ஒரு கோடி ரூபாய் செலவு செய்யும் வல்லமை உடையவர்களாக இருக்க வேண்டும். இவர்களிடம் மாவட்ட செயலாளர் நேர்காணல் நடத்துவார். அப்போது, ஒரு கோடி ரூபாயை கண்ணில் காட்டினால் மட்டுமே, வேட்பாளர் பட்டியலுக்கு அவர் பரிந்துரைக்கப்படுவார். இந்த மூன்று பேரில் கூடுதலாக செலவு செய்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.
' ஆளுங்கட்சி நிர்வாகிகள் வெற்றிக்காக பணத்தை வாரியிறைக்கும்போது, அதற்குச் சமமாக நாமும் பணம் இறைத்தால்தான் உள்ளாட்சியில் கூடுதல் இடங்களைப் பெற முடியும்' என தி.மு.க தலைமை கணக்குப் போடுகிறது. தவிர, ' உள்ளாட்சித் தேர்தலுக்காக ஒரு ரூபாயைக்கூட தலைமையிடம் இருந்து எதிர்பார்க்க வேண்டாம். சொந்த செல்வாக்கிலேயே போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார் ஸ்டாலின். தலைமையின் கண்டிப்பான நடவடிக்கையால், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் கட்சியின் நீண்டநாள் விசுவாசிகள். அதைப் பற்றியெல்லாம் அறிவாலயம் கவலைப்படவில்லை" என்றார் விரிவாக.
" இதைவிடக் கொடுமை என்னவென்றால், வார்டுகளில் முன்பு கவுன்சிலராக இருந்தவர்கள் எல்லாம் சரிவர வேலை பார்க்கவில்லை. மீண்டும் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு வலிமையாக இருக்கின்றனர். ' தங்களுக்கு சீட் கிடைக்கும்' என வார்டுகளில் களப் பணி செய்தவர்கள் எல்லாம் புறக்கணிக்கப்படுகின்றனர். உள்ளாட்சி தொகுதிகளில் பல வார்டுகள் ஆண், பெண் என இடம் மாறிவிட்டதால், கட்சியின் பகுதிக் கழக செயலாளர்கள் பலர், வேறு வார்டுகளை நோக்கிப் படையெடுக்கின்றனர். அங்கு ஏற்கெனவே வேலை பார்த்து வந்த வட்டச் செயலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பகுதிக் கழக செயலாளர்களைத் தாண்டி, தலைமையின் கவனத்தைப் பெற முடியவில்லை. எங்களுடைய வேதனையை கடிதம் மூலம் தெரிவித்து வருகிறோம்" என்கிறார் சேப்பாக்கம் தொகுதி தி.மு.க நிர்வாகி ஒருவர்.
உள்ளாட்சி தேர்தல் முடிவதற்குள், உடன்பிறப்புகள் மத்தியில் உரசல் ஏற்படாமல் இருந்தால் சரி...!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.