Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 6, 2016

டி20 தோல்விக்கு தோனி சொல்லும் காரணம்!


கடந்த ஆகஸ்ட் மாதம் 27 மற்றும் 28ம் தேதி அமெரிக்காவில் இந்தியா மேற்கு இந்திய தீவு அணிகளுக்கு இடையே இரண்டு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெற்றன. அதில் புளோரிடா நகரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா போராடி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கடுத்து அதே நகரில் இரண்டாவது போட்டியும் நடந்தது. 28ம் தேதி நடந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி இருபது ஓவர்களில் நூற்று நாற்பத்து மூன்று ரன்கள் எடுத்தது. பின்னர் ஆட்டத்தை தொடர்ந்த இந்தியா இரண்டு ஓவர்களில் பதினைந்து ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியது.

இதை தொடர்ந்து இந்திய அணி தோல்வியுடன் வீடு திரும்பியது. இதற்கிடையே நேற்று இந்திய அணித் தலைவரான தோனி, இந்தியக் கிரிக்கெட் கவுன்சிலில் ஒரு புகார் அளித்துள்ளார். ஏழு முப்பதுக்கு தொடங்க வேண்டிய ஆட்டம் எட்டு பத்துக்கு தான் தொடங்கியது. ஆட்டத்தை நேரலையாக ஒளிபரப்பு செய்ய தேவையான செயற்கைக்கோளில் சிக்கல் ஏற்பட்டதால், ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்திய அணி குறைந்தப் பட்சம் ஐந்து ஓவர்கள் ஆடி இருந்தால் தான் டக் ஒர்த் லூயிஸ் முறையை பயன்படுத்த முடியும். அந்த நாற்பது நிமிட தாமதம் இல்லாமல் இருந்து இருந்தால் இந்திய அணி ஐந்து ஓவர்களை கடந்து ஆடியிருந்திருக்கும். ஆட்டத்திற்கு முடிவு கிடைத்திருக்கும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதியின் படி ஆட்டம் தாமதமாக தொடங்க மூன்று காரணங்கள் தான் இருக்க முடியும்.

1. மழை
2. குறைந்த ஒளி
3. ஆடுகளம் சரி இல்லாமல் இருத்தல்

செயற்கைக்கோள் சிக்கல்களுக்காக ஆட்டத்தை ஒத்தி வைத்தது சரியா? என்று வினவியுள்ளார் தோனி. மேலும் அந்த தாமதம் காரணமாக இந்தியா ஆட்டத்தை தோற்க நேர்ந்தது. விலை உயர்ந்த டிக்கெடுகளை வாங்கி ஆட்டத்தை பார்க்க வந்த மக்கள் ஆட்டத்திற்கு ஒரு முடிவு கிடைப்பதை பார்க்காமல் வீடு திரும்பினர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதியின் கீழ் வராத காரணத்திற்காக போட்டியின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற சன்செட் அண்ட் வைன் நிறுவனம் ஆட்டத்தை நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதைப் பற்றி பேசிய விளம்பரதாரரான சுனில் குப்தா, "போட்டி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் விளம்பரதாரரின் பணம். தொழில்நுட்ப சிக்கல் காரணமாக போட்டியை தள்ளி வைத்தது சரி தான். விளம்பரதாரரின் பணம் இல்லையென்றால் இந்திய மக்கள் செலவே இல்லாமல் வீட்டில் இருந்தபடி போட்டியை பார்க்க முடியாது. விளம்பரங்களும் போட்டியும் கைகோர்த்து செல்ல வேண்டும்." என்று கூறியுள்ளார்.

போட்டிக்காக ஒளிபரப்பா? அல்லது ஒளிபரப்புவதற்காக தான் போட்டியே நடத்தப்படுகிறதா?., என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.