Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 3, 2016

ஒரு டன் சந்தனக்கட்டை ரூ.1.33 கோடி: கிறுகிறு லாபம்!


ஒரு டன் இந்திய சந்தனக்கட்டைகள் ரூ.1.33 கோடிக்கு விற்பனை ஆகிறது என்று மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார் ஆஸ்திரேலிய விவசாயி பவுல் மோக்.

ஆரம்பத்தில் கரும்பு வேளாண்மை செய்தவந்த அவர், 'உலக மார்க்கெட்டில் இந்திய வகை சந்தனத்திற்கு இருக்கும் மார்க்கெட் மதிப்பு அதிகம்', அதனால் தற்போது தனது பண்ணையில் இந்திய சந்தனம் பயிரிடுவதாகக் கூறுகிறார் ஆர்வம் குறையாமல்.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் பவுல் மோக்," கடந்த 2000 ம் ஆண்டு வரையில் கரும்பு மட்டுமே விளைவித்து வந்தேன்.மேற்கு ஆஸ்திரேலியாவின் ஓர்ட் நதியின் நீர்ப்பாசனம்தான் எங்களின் வேளாண்மை ஆதாரம். அப்போதுதான் எனது தந்தை மாற்று விவசாயத்தில் ஆர்வம் கொண்டு, இந்திய சந்தன வகை மரங்கள் வளர்த்து ஆராய்ச்சி செய்துவந்தார்.அதில், மிகப்பெரிய அளவுக்கு முன்னேற்றம் கண்ட அவர்,சந்தன வகைகளில் இந்திய வகை சந்தனம் போல பார்க்கவில்லை. அபரிமிதமான வளர்ச்சி என்றார். இதனை நாம் பயிரிட்டால் என்ன என்ற எண்ணத்தையும் எனக்குள் விதைத்தார்.

        

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு எனது பண்ணையில் சந்தனம் பயிரிட்டேன். அபாரமான வளர்ச்சி.தொட்டாலே மணக்கும் இந்திய சந்தன மரங்கள் உலக மார்க்கெட்டில் நம்பர் ஒன். ஒரு டன் விலை 2 லட்சம் டாலர்.(இந்திய மதிப்பில் ரூ.1.33 கோடி). எனது பண்ணையில் இருந்து விளையும் சந்தன மரங்கள் தாய்வான் நாட்டுக்கு ஏற்றுமதியாகிறது. நன்கு விளைந்த சந்தன மரத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இயற்கை மருந்து உற்பத்தி செய்ய  பயன்படுத்தப்படுகிறது. அதனால் ஆசியாவில் சந்தனம் மார்க்கெட் எப்போதும் சரியாதது. " என்று கூறியிருக்கிறார் பவுல்.

ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் ஓடும் 'ஓர்ட் நதி' 650 கிலோமீட்டர் நீளத்திற்கு செல்கிறது. அதில் 320 கிலோமீட்டர் தூரம் கிம்பர்லி மாகாணத்தில் பயணிக்கிறது. ஆண்டுமுழுவதும் வற்றாத நீர் செல்வத்தைக் கொண்டுள்ள ஓர்ட் நதி மேற்கு ஆஸ்திரேலியாவின் வேளாண்மையின் உயிர் நாடி என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.இருபதாம் நூற்றாண்டின் சாதனையாக ஆஸ்திரேலியர்களால் கொண்டாடப்படும் 'ஓர்ட் நதி நீர்ப்பாசனத்திட்டம்' மூலம்தான் பண்ணை விவசாயம் வெற்றிகரமான தொழிலாக இருக்கிறது.

சந்தன விவசாயம் இப்போது ஆஸ்திரேலியாவின் 'பேஷனாக' இருக்கிறது என்கிறார் பவுல் மோக். "சந்தன வகைகளில் இந்திய வெரைட்டி புகழ் பெற்றது.இதனை உணர்ந்த பிறகே நான் சந்தனப் பயிர் செய்து வருகிறேன்.இப்போது எனது பண்ணையில், சந்தன மரங்கள் செழித்துள்ளன. பலவகை பறவைகள் தங்கி வாழ்ந்து வருகின்றன. எனது சந்தனப் பண்ணையைப் பார்த்து வேறு சில விவசாயிகளும் இந்திய சந்தனத்தைப் பயிரிட முயன்று வருகின்றனர்.ஆனால் அவர்கள் இதில் லாபம் பார்க்க ஆண்டுகள் பல காத்திருக்க வேண்டும்." என்கிறார் பவுல் மேலும்.

இந்திய சந்தனத்தின் மதிப்பை ஆஸ்திரேலிய விவசாயி அறிந்து வைத்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.