சிவகங்கை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தியதற்காக, கொடும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் தலித் மக்கள். ' உழைத்து சம்பாதித்த மொத்தப் பொருட்களையும் சிதைத்துவிட்டார்கள். இப்படியொரு கொடூர தாக்குதலைப் பார்த்ததில்லை' எனக் கதறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசனூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட தலித் மக்கள் குடியிருக்கின்றனர். முழுக்க முழுக்க விவசாயக் கூலிகள் நிரம்பியுள்ள பகுதி இது. இந்தப் பகுதியில் கடந்த 16 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வந்துள்ளனர். ' இந்தமுறை நாங்களும் விநாயகருக்கு சிலை வைத்து, ஊர்வலம் நடத்துவோம்' என கள்ளர் சாதியைச் சேர்ந்த மக்கள் போலீஸாரிடம் மனு கொடுத்தனர். ' ஒரே ஊரில் இரண்டு சமுதாய மக்கள் ஊர்வலம் நடத்தினால், தேவையற்ற சச்சரவுகள் ஏற்படும். அனுமதிக்க முடியாது' என பூவந்தி காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, காதி அமைச்சர் பாஸ்கரை சந்தித்துப் பேசியுள்ளனர் கள்ளர் சமுதாய பிரதிநிதிகள். போலீஸாரும், விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்துவதற்கு மட்டும் அனுமதி கொடுத்தனர். இதன்பின்னர் நடந்த சம்பவத்தைப் பற்றி நம்மிடம் விவரித்தார் சி.பி.எம் கட்சியின் நகர செயலாளர் வழக்கறிஞர் மதி.

"விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு மந்தையம்மன் கோயிலுக்கு கொண்டு செல்வது வழக்கம். ' ஊர் பொது வழியில் விநாயகரைக் கொண்டு வரக் கூடாது' என கள்ளர் சாதி இளைஞர்கள் தடுத்துள்ளனர். அந்த இடத்தில் பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர், அந்த இளைஞர்களிடம் சத்தம் போட்டு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, ஓப்பன் மைக்கிலேயே தலித் மக்களின் சாதியைச் சொல்லி திட்டியுள்ளனர். மறுநாள் பால் குடம் எடுக்கும் நிகழ்விலும் தகராறு நடந்தது. போலீஸாரின் அனுமதியை மீறி கள்ளர் சாதியைச் சேர்ந்த இளைஞர்களும் ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

காவல்துறையின் கண்டிப்பை அவர்கள் பொருட்படுத்தவில்லை. தலித் மக்களுக்கு மட்டும் கூடுதல் சிறப்பு தருவதாக ஆத்திரப்பட்ட, அந்த சமூகத்து இளைஞர்கள் சுமார் 50 பேர் நேற்று இரவு அரிவாள், உருட்டுக்கட்டை, இரும்புக் கம்பிகளோடு தலித் குடியிருப்புக்குள் நுழைந்தனர். இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் எட்டு பைக்குகள், ஒரு கார், ஒரு ஆட்டோ, மிக்ஸி, கிரைண்டர் என கண்ணில் பட்ட பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கினர். பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துவிட்டன.
நேற்று திருமணம் நடந்த வீட்டில் புதுமண தம்பதியை மிரட்டி, மொய்ப் பணம் நாற்பதாயிரத்தை திருடிச் சென்றுவிட்டனர். வீடுகளில் இருந்து அனைத்து அத்தியாவசிய பொருட்களும் சேதமடைந்துவிட்டதால், இன்று சாப்பாட்டிற்குக் கையேந்தி நிற்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர். ஆட்களை அடித்து நொறுக்குவதைவிட, சொத்துக்களை சேதப்படுத்தி நிர்மூலமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆயுதங்களோடு வந்துள்ளனர். காவல்நிலையத்தில் 32 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். ஆனால், முதல் தகவல் அறிக்கையை போலீஸார் கண்ணில் காட்டவில்லை. தலித் மக்களின் உடைமைகள் மீதான தாக்குதலைக் கண்டித்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் கந்தசாமி தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யும் வரையில் நாங்கள் ஓயப் போவதில்லை" என்றார் கொந்தளிப்போடு.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.