Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 9, 2016

பாலைவன மணலை, வளமாக்கிய சீனர்கள்!


இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் அரிசியை, பிளாஸ்டிக்கில் இருந்து உருவாக்கி உலகையே அதிரவைத்த சீனர்கள், தற்போது புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். மணலை மண்ணாக்கும் புதிய தொழில்நுட்பத்தைத்தான் கண்டறிந்துள்ளனர். இது என்னடா பெரிய விஷயம் என்கிறீர்களா? சாதாரண மணலில், பெரும்பாலான தாவரங்கள் முளைக்காது. ஆனால், மணலை வளமான மண்ணாக மாற்றிய பிறகு அந்த மண்ணில் வளம் கூடியுள்ளது. சாதாரணமாக மண்ணில் விளையும் பயிர்கள் அனைத்தும், மணலில் இருந்து மாற்றிய மண்ணிலும் விளைந்தன. இப்படி சீனாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 1.6 ஹெக்டேர் பரப்பளவினை கொண்ட 'உலன் புக்' பாலைவனத்தை நல்ல வளமான மண்கொண்ட விவசாய பூமியாக மாற்றியிருக்கிறார்கள். இந்த நிலத்தில் நெல், மக்காச்சோளம், தக்காளி, தர்பூசணி, சூரிய காந்தி அருமையான விளைச்சலை தந்துள்ளதாக, ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.



     இது பற்றி பேசிய ஆய்வுக்குழுவின் தலைவர், யி ஜிஜியன், "பாலை நிலங்களை விலை நிலங்களாக மாற்றும் இந்த முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர் சீன ஆராய்ச்சியாளர்கள். இதனை, சீனாவின் சாங்கிங் ஜியோட்டாங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு தாவரங்களில் உள்ள 'செல்லுலோஸ்'-ஐ பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர். செல்லுலோஸிலிருந்து வெளிவரும் பசையானது மணலோடு சேர்க்கும் போது நீர் மற்றும் ஊட்டச் சத்துக்களை தக்க வைத்துக் கொள்வதோடு தாவரங்கள் தாங்கி வளர்வதற்கான சூழலையும் பெறுகிறது. இந்த தொழில் நுட்பமானது பாலைகளை தாவரங்கள் வளருவதற்கேற்ற நல்ல நிலங்களாக மாற்ற உதவி புரியும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு புதிதாக மாற்றப்பட்ட நிலங்களில் வாழும் தாவரங்களின் நீர் தேவை சாதாரண நிலங்களில் வாழும் தாவரங்களைப் போன்றே உள்ளது. மேலும், குறைந்த உரங்களின் மூலம் இந்த நிலங்களில் அதிக விளைச்சல் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறைவான மழை உள்ள பகுதிகளில் இதை சோதனை செய்த போதும் தாவரங்கள் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்பையே இந்த நிலங்கள் பெற்றுள்ளது. மணல் நிலங்களை நல்ல வளமான நிலங்களாக மாற்ற 22,500 முதல் 40,500 யான் ($3,373 - $6071) ஒரு ஹெக்டேருக்கு செலவாகும்" என ஆய்வுக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 25 சதவீத நிலங்கள் பாலைவனங்களாக உள்ளது. மேலும் நல்ல நிலங்களும் 35 சதவீதம் கெட்டுவிட்டன. (2014 நிலவரப்படி). இவ்வாறு நிலங்கள் பாலைவனங்களாக மாறுவதால் அதிக மண் அரிப்பு போன்றவை அவ்வப்போது ஏற்படுகிறது. அதிகபட்சமாக ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு & காஷ்மீர், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலும் பாலை நிலங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.