ஜெயலலிதாவின் பொய்யான தேர்தல் அறிக்கைகள் என்கிற வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரத்தை தீயிட்டு கொளுத்திய ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் உள்பட 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கடந்த 10 நாட்களாக பெரவள்ளூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். தமிழகத்தில் லோக் அயுக்த - வை கொண்டு வரவேண்டும் என்பது அவரது கோரிக்கை. ஆனால், தமிழக அரசு இவரது உண்ணாவிரதப் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், போயஸ்கார்டனை முற்றுகையிடப்போவதாக இன்று அறிவித்தார். அதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்ய வந்தனர். மக்களை ஏமாற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் பொய்யான தேர்தல் அறிக்கைகள் என்கிற வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரத்தை வசீகரனின் ஆதரவாளர்கள் தீயிட்டு கொளுத்தினார். அப்போது போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைதொடர்ந்து வசீகரனும் அவரது ஆதரவாளர்கள் 40 பேர்களும் கைது செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.