Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 29, 2016

50-மணி நேரம் தொடர்ந்து இயற்கை உணவு சமைக்கும் கலைஞர்


மதுரையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வெள்ளிக் கிழமை காலை தொடங்கி 50 மணி நேரம் தொடர்ந்து இயற்கை உணவுகளை சமையல் கலைஞர் பிரகாஷ் தயாரித்து வருகிறார்.

தானியங்கள் உள்பட இயற்கை பொருட்கள் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவுகளை அவர் தயாரித்து வருகிறார்.

ஆரோக்கியம் தரும் பல்வேறு வகையான இயற்கை உணவுகளை நாளை வரை தொடர்ந்து தயாரிக்க உள்ளதாகவும் பிரகாஷ் தெரிவித்தார்.

இந்த முயற்சி கின்னஸ் சாதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழர்களின் பாரம்பரிய இயற்கை உணவு முறைகளை மீண்டும் பிரபலப்படுத்தும் வகையில், இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.