காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் போக்கை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் கடைகள் முழுவதும் அடைக்கபட்டுள்ளன. தனியார் பள்ளிகள், மற்றும் தனியார் கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்கபட்டுள்ளது.
தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையாக காவிரி நதி நீர் பிரச்னை பார்க்கபடுவதால், விவசாயிகள் மட்டும் அல்லாமல், அவர்களுக்கு ஆதரவாக வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தனியார் பேருந்துகள், என பல தரப்பிலும், இந்த வேலைநிறுத்ததில் பங்கேற்று உள்ளதால், தமிழகத்தின் முக்கிய நகரங்களின் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. ஆளுங்கட்சியும் இந்த ஆர்பாட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்று விவசாயிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் எதிர்பார்த்தனர். ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் பந்த் நடத்தக் கூடாது என்ற சுப்ரிம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், நாங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அதிமுக வினர் விளக்கம் அளித்துவருகின்றனர்.

அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டாம், ஆனால் அந்த கட்சி சார்பில், இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பாவது கொடுக்கலாமே, அதற்கு என்ன தடை இருக்கிறது” என்று போராட்டக் குழுவினர் புலம்பிவரும் நிலையில், அதிமுக வில் வேலைநிறுத்த போராட்டம் தினத்தன்று தான், உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்பமனு வாங்கும் பணியை துவக்கியுள்ளார்கள். அனைத்து மாவட்டங்களிலும், மண்டபத்திலும், கட்சி அலுவலகத்திலும், ஏராளமான அதிமுகவினர்,குவியத் துவங்கியுள்ளார்கள்.
இது முன்னரே திட்டமிடப்பட்ட நிகழ்வாக கூறபட்டாலும், தமிழக விவசாயிகளின் நலனை முன்னிட்டு நடைபெறும் போராட்டத்திற்கு, ஆதரவு தெரிவித்தாவது, இவர்கள் இன்று இந்த நிகழ்ச்சியை ஒத்திவைத்திருக்கலாம். ஆனால் அ.தி.மு,கவினர் இதை ஒரு கொண்டாட்டமாகவே விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது, வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளதாக என்று விவசாயிகள் புலம்புகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.