சென்னை: தமிழக-கர்நாடக எல்லைப்பகுதிகளில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருவதை தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதை தொடர்ந்து, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது. இதை எதிர்த்து, கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கடந்த வெள்ளியன்று கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டமும் நடைபெற்றது.
அதனால், பதற்றம் காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் அனைத்தும் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. இதனால், கர்நாடகா செல்லும் பயணிகளும், எல்லையோர மாவட்டங்களில் இருந்து கர்நாடகாவிற்கு பணிக்கு செல்லும் மக்களும் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.
இந்நிலையில், தமிழக-கர்நாடக எல்லைப்பகுதிகளில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருவதை தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு 6 நாட்களுக்கு பின் இன்று (11-09-16) காலை முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, ஒசூரிலிருந்து தமிழகப் பேருந்துகள் கர்நாடக மாநிலத்திற்கு மீண்டும் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியுள்ளன.
இதனால், பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களும் கர்நாடகாவிற்கு இயக்கப்படுகின்றன. ஆனால், ஈரோடு சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் பேருந்துகள், இன்னும் வழக்கம் போல் இயக்கப்படவில்லை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.