பருவநிலை மாறுபாடு தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்த அமெரிக்காவும் சீனாவும் நேற்று முறைப்படி ஒப்புதல் அளித்தன.
கடந்த 2015 டிசம்பரில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.நா. சபை சார்பில் பருவநிலை மாறுபாடு குறித்த மாநாடு நடைபெற்றது. அப்போது பூமியின் வெப்ப நிலையை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் 200 நாடுகள் கையெழுத்திட்டன.
ஒபாமா - ஜி ஜின்பிங்
ஒப்பந்தத்தை அமல்படுத்த குறைந்தபட்சம் 55 நாடுகள் ஒப்புதல் தர வேண்டும். இதுவரை 23 நாடுகள் மட்டுமே ஒப்பந்தத்துக்கு முறைப்படி ஒப்புதல் அளித்துள் ளன.
இந்தப் பின்னணியில் சீனாவின் ஹாங்சோ நகரில் ஜி20 மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று ஹாங்சோ நகருக்குச் சென்றார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது பாரீஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தை அமல்படுத்த இரு நாடுகளின் தலைவர்களும் முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்ட ஆவணங்களை அளித்தனர்.
பூமியைக் காப்போம்
பின்னர் இருவரும் நிருபர் களுக்கு கூட்டாக பேட்டியளித்த போது, பூமியைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. இரு நாடுகளும் பாரீஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளோம். உலக வரலாற்றில் இது ஒரு முக்கிய திருப்பம். இதர நாடுகளும் எங்களைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
உலகளாவிய அளவில் கரியமில வாயுக்களை அதிகம் வெளியிடும் நாடுகளில் அமெரிக் காவும் சீனாவும் முன்னணியில் உள்ளன. இருநாடுகளும் சுமார் 40 சதவீத அளவுக்கு கரியமில வாயுவை வளிமண்டலத்தில் கலக்கச் செய்கின்றன.
இதேபோல ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் உலகளாவிய அளவில் சுமார் 80 சதவீத கரியமில வாயுவை வெளியேற்று கின்றன. எனவே ஜி20 நாடுகள் அனைத்தும் பாரீஸ் ஒப்பந்தத் துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அமெரிக்காவும் சீனாவும் வலியுறுத்தியுள்ளன.
சீனாவில் பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜி20 மாநாட்டில் பங்கேற்க வியட்நாமில் இருந்து நேற்று ஹாங்சோ நகருக்கு சென்றார். இன்று அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுகிறார். அப்போது என்.எஸ்.ஜி. விவகாரம், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சீன அதிபருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.