September 20, 2016
ஆட்சியை இழந்தாலும் தண்ணீர் தரக் கூடாது. மிரட்டும் பாஜக ஈஸ்வரப்பா
பெங்களூரு: ஆட்சியை இழந்தாலும் காவிரியில் இருந்து தண்ணீரை திறந்து விடக் கூடாது என்று பாஜக சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ஈஸ்வரப்பா ஆளும் காங்கிரஸ் கட்சியை மிரட்டியுள்ளார்.
காவிரி பிரச்சனை தொடர்பாக இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா, தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் கூறினாலும் கர்நாடக அரசு அதை ஏற்க முடியாது என்று தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானாலும் முதலமைச்சருடன் சேர்ந்து சிறை செல்ல தாங்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ள ஈஸ்வரப்பா, கர்நாடகா அணைகளில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத போது, தமிழகம் அடுத்த சாகுபடிக்கு தண்ணீர் கேட்பது அநியாயம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடக முதல்வர் சித்தராமையா, காவிரி பிரச்சனையை சரியாக கையாளவில்லை என்று ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது பாஜக தலைவரான ஈஸ்வரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
ஆட்சியை இழந்தாலும் தண்ணீர் தரக் கூடாது. மிரட்டும் பாஜக ஈஸ்வரப்பா
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.