Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 9, 2016

சுற்றுலா சென்ற இடத்தில் துரத்தித் துரத்தி விடாமல் பலாத்காரம்



தாய்லாந்து நாட்டிற்கு சுற்றூலா சென்ற இடத்தில் ஆசிரியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டை சேர்ந்த ஹன்னா கவியோஸ் ( வயது 23) ஆசிரியையாக பணி புரிந்து வருகின்றார். தனது விடுமுறையை கொண்டாட தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றார்.
தெற்கு தாய்லாந்தில் உள்ள க்ரபி என்ற பகுதியில் தங்கியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் இப்பகுதியில் இருந்து சில கிலோமீற்றர் தொலைவில் உள்ள பகுதிகளை சுற்றி பார்த்து முடிக்க இரவு 11 மணி ஆகியுள்ளது. குறித்த ஆசிரியை தங்கியுள்ள வீட்டிற்கு தனியாக திரும்பிச் செல்ல பயந்த அவர் அருகில் உள்ள சுற்றுலா தள அலுவலகத்திற்கு சென்று உதவி கேட்டுள்ளார்.

அப்போது, அங்கு பணிபுரிந்த 28 வயதான நபர் அவரை அழைத்துச் சென்று அறையில் விட சம்மதித்துள்ளார். நபரின் தோற்றத்தை கண்ட பெண் எதோ விபரீதம் நடக்கப் போகிறது என சந்தேகம் அடைந்துள்ளார். வேறு வழியில்லாத காரணத்தினால் அவருடன் காட்டுப்பகுதியில் நடந்துச் செல்ல சம்மதித்துள்ளார்.

ஆனால், தங்கியுள்ள அறையை நோக்கி செல்லாமல் அந்த நபர் ஹன்னாவை எதிர் திசையில் மலையின் உச்சிக்கு செல்லும் வழியில் அழைத்துச் சென்றுள்ளார்.
சில நிமிடங்கள் பயணத்திற்கு பின்னர் திடீரென அந்த நபர் பெண் மீது பாய்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். ஆனால், நபரின் தாக்குதலை எதிர்க்கொண்ட பெண் அவரது காதை பாதியாக கடித்து துப்பிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பாதை முழுவதும் இருட்டாக இருந்ததால், ஓரிடத்தில் மலை உச்சியில் இருந்து கீழே தவறி விழுந்து விட்டார். இதில், அவரது இடுப்பு எழும்பு உடைத்துள்ளது.
இச்சூழலை பயன்படுத்திக்கொண்ட நபர் வலியால் கதறி துடித்த பெண்ணிடம் பாலியல் தாக்குதலை நடத்தியுள்ளார். சில மணி நேரத்திற்கு பிறகு அந்த நபர் அங்கிருந்து தப்பியுள்ளார்.
இரவு முழுவதும் பெண் அதே இடத்தில் வலியால் துடித்துள்ளார். மறுநாள் காலையில் அவ்வழியாக சென்ற நபர்கள் அவரை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.