September 28, 2016
ஹிலாரியைப் பார்த்ததும் டக்கென ‘பின்னழகை’க் காட்டி திரும்பி நின்ற அமெரிக்க மக்கள்... ஏன் தெரியுமா?
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், பார்வையாளர்கள் அவருடன் கூட்டமாக செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஹிலாரிக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனால் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
செல்பி புள்ள...
ஆனால், முன்பு மாதிரி தமக்கு பிடித்தமான தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மேடைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இருப்பதில்லை. தங்களது செல்போன் மூலமே பிடித்தவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார்கள்.
ஹிலாரியின் வருகை...
அந்தவகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்தார் ஹிலாரி. அவர் வந்ததும், அங்கு கூடியிருந்த மக்கள் உடனடியாக திரும்பி நின்று கொண்டனர். வேறு எதற்கு ஹிலாரியுடன் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொள்ளத்தான்.
எதிர்ப்பு இல்லை...
ஒரே நேரத்தில் அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் திரும்பி நின்றது, பார்ப்பதற்கு அவர்களது எதிர்ப்பை பதிவு செய்வது போல் காட்சி அளித்தது. ஆனால், அது செல்பிக்காகத் தான் என்பது அவர்களது கைகளில் உள்ள செல்போனைப் பார்த்தபிறகே புரிகிறது.
சிரித்த முகத்துடன்...
ஹிலாரியும் சிரித்த முகத்துடன் பொறுமையாக ஒவ்வொரு பக்கமாகத் திரும்பி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார். ஆனால், டிரம்ப்புக்கு இப்படிக் கூட்டம் கூடுச்சான்னு தெரியலை!
ஹிலாரியைப் பார்த்ததும் டக்கென ‘பின்னழகை’க் காட்டி திரும்பி நின்ற அமெரிக்க மக்கள்... ஏன் தெரியுமா?
Reviewed by மறத்தமிழன்
on
September 28, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
September 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.