Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 11, 2016

இஸ்ரேல் பிரதமருடன் கைகுலுக்க மறுத்த தலைவர்



நெதர்லாந்தில் நடந்த தலைவர்கள் சந்திப்பிற்கு செப்டம்பர் 7 அன்று வருகை தந்திருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன்
டட்சு சட்டமன்ற உறுப்பினரான துனஹன் கூஸூ, கைகுலுக்கு மறுத்தார்.
நெதன்யாகு வரிசையாக அனைத்துத் தலைவர்களிடமும் கைகுலுக்கிக் கொண்டே வரும்போது கூஸூவின் அருகில் வந்து கையை நீட்டியபோது கூஸூ கைகுலுக்க மறுத்துவிட்டார். இது போன்ற அவமானங்கள் நெதன்யாகுவிற்குப் புதிதல்ல என்பதால் சற்றும் அதிர்ச்சியடையாத நெதன்யாகுத் தன் தோள்களைக் குலுக்கியவாறு நகர்ந்துவிட்டார். அப்போது கூஸூ, பாலஸ்தீனக் கொடியின் பேட்ஜைத் தன் சட்டையில் குத்தியிருந்தார்.
தான் நெதன்யாகுவுடன் கைகுலுக்காததற்குக் காரணமாகத் தன் முகநூல் பக்கத்தில் கூஸூ தெரிவித்திருப்பதாவது: இஸ்ரேலுக்கான சிகப்புக் கம்பளம் (மரியாதை) சுருட்டப்பட்டுவிட்டது. ” என்று குறிப்பட்டுள்ளார்.
பாலஸ்தீனில் இஸ்ரேல் நடத்தி வரும் போரையே அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து “காஸாவின் தெருக்களில் ரத்த ஆறு ஓட்டப்டுகிறது. பாலஸ்தீனின் குழந்தைகளைக் கூட இரக்கமின்றி கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்குச் சிவப்புக் கம்பளம் சுருட்டப்பட்டுவிட்டது. இத்தகைய கொடும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் பாலஸ்தீனைச் சுதந்திரமாக விடுதலை செய்யுமாறு தெரிவிக்கவுமே கைகுலுக்குவதைத் தவிர்த்தேன் ” என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.