September 22, 2016
மனைவியை கட்டாயப்படுத்தி பெற்றோர் அழைத்துச் சென்றதாக கணவர் குற்றச்சாட்டு!
திருப்பூரில் காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை, கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்ற அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ளார்.
திருப்பூரில் தனியார் பனியன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் சுந்தர்ராஜ். இவருடன் திருச்சியைச் சேர்ந்த திவ்யா என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், இதற்கு திவ்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று முன்தினம் இருவரும் திருப்பூரில் கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையறிந்த திவ்யாவின் பெற்றோர், அவரை நேற்று தங்கள் வீட்டிற்கு, அடித்து கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாக சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ள சுந்தர்ராஜ், திவ்யாவின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது மனைவியை மீட்டுத் தர வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனைவியை கட்டாயப்படுத்தி பெற்றோர் அழைத்துச் சென்றதாக கணவர் குற்றச்சாட்டு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 22, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 22, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.