September 29, 2016
மாணவர்களை கொடூரமாகத் தாக்கிய ஆசிரியர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை
அரியானா மாநிலத்தில் டியூசன் வகுப்புக்கு தாமதமாக வந்த 10 மற்றும் 12-வது வகுப்பு மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்னால் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியரான பிரதீப் அரோரா, தனியாக டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில் டியூஷனிற்கு தாமதமாக வந்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை ஆசிரியர் அரோரா சரமாரியாக தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மாணவர்களை ஸ்கேலால் அடிப்பது, மாணவிகளை தலைமுடியை பிடித்து இழுப்பது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
மாணவர்கள் சிலர் இந்த காட்சிகளை செல்போனில் ரகசியமாக படம் பிடித்துள்ளனர். வகுப்புக்கு தாமதமாக வந்தது, வீட்டு பாடம் செய்யாமல் இருந்தது மற்றும் குறைவான மதிப்பெண் எடுத்ததற்காவும் மாணவர்களை, ஆசிரியர் அராரோ அடித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்படாவிட்டாலும், காட்சிகளை ஆதாரமாக கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்களை கொடூரமாகத் தாக்கிய ஆசிரியர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 29, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 29, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.