September 22, 2016
தண்ணீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை மரணம்!
திருவொற்றியூர் அருகே கட்டுமான வேலை நடைபெற்ற பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மணலி சின்னசேக்காடுவைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரும் அவரது மனைவி அரசியும், திருவொற்றியூர் அருகே காலடிப்பேட்டையில் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவர்கள் அழைத்து வந்திருந்த அவர்களின் இரண்டரை வயது மகள் இந்துஜாவைக் காணவில்லை என அப்பகுதியில் தேடினர். எங்கும் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், கட்டுமான வேலை நடக்கும் இடத்திலுள்ள தண்ணீர் தொட்டிக்குள் தற்செயலாக பார்த்தபோது உயிரிழந்து கிடந்த குழந்தையைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தையின் உடலை மீட்ட திருவொற்றியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
தண்ணீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை மரணம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 22, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 22, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.