September 29, 2016
உ.பி.யில் பயங்கரம்: பெற்றோரை பணயக்கைதிகளாக பிடித்து சிறுமி கூட்டு பாலியல்...
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பெற்றோர்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டு 12 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையானது கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினமும் பதிவாகி வருகிறது. இந்த கொடூரத்தின் உச்சமாக, லக்னோவில் பெற்றோர்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டு 12 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.
லக்னோவின் புறநகர் பகுதியில் வசிக்கும் சிறுமியின் வீட்டிற்குள் இரவு 10 பேர் கொண்ட மர்ம கும்பல் புகுந்து உள்ளது. வீட்டிற்குள் நுழைந்த மர்ம கும்பல் சிறுமியின் பெற்றோர்களை கடுமையாக தாக்கிஉள்ளது. இதில் சிறுமியின் தந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
அவர்களை வீட்டிற்குள் அடைத்துவிட்டு சிறுமியை மர்ம கும்பல் சிறிது தூரம் தரதரவென்று இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர். உ.பி.யில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் 12 வயது சகோதரன் பேசுகையில், ”அவர்கள் தாழ்ப்பாளை உடைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தனர். என்னுடைய தாயாரை தாக்கினர். என்னுடைய தந்தை அதனை தடுக்க சென்றார்,
உடனடியாக அவர்கள் என்னுடைய தந்தையை பலமாக தாக்கினர். அவரது தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் என்னுடைய சகோதரியை இழுத்து சென்றனர். நான் அவர்களை பின் தொடர்கையில் என்னையும் பலமாக தாக்கினர், இதனால் நான் கீழே விழுந்துவிட்டேன்,” என்று கண்ணீர் மல்க கூறினார்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி மான்சில் ஷாய்னி பேசுகையில், “5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சிறுமி என்னிடம் கூறி உள்ளார். சிறுமியின் வீட்டில் இருந்து சுமார் 600-700 மீட்டர் தொலைவில் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது.
இதுதொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது என்றார். அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்நோக்கி உள்ள சமாஜ்வாடி ஆட்சிசெய்யும் உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது.
உ.பி.யில் பயங்கரம்: பெற்றோரை பணயக்கைதிகளாக பிடித்து சிறுமி கூட்டு பாலியல்...
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 29, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 29, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.