Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 26, 2016

நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதியை மடக்கிப் பிடித்த போலீசார்!



திண்டுக்கல்லில் விசாரணைக்காக ஆஜர்படுத்த அழைத்து சென்ற போது நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதியை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த ஐயப்பன் என்பவர், செப்டம்பர் 18ம் தேதி தனது மனைவி வள்ளியை கழுத்து அறுத்து கொலை செய்தார். மேலும் தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

இந்நிலையில் மதுரையில் இருந்து திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக போலீசார் ஐயப்பனை அழைத்து சென்றனர். நீதிமன்ற வாசலில் நின்று கொண்டிருந்த போது திடீரென அங்கிருந்து ஐயப்பன் தப்பினார்.

இதையடுத்து வத்தலகுண்டு சாலை என்.பஞ்சம்பட்டி பிரிவு அருகே ஐயப்பனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தன

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.