Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 5, 2016

​முன் விரோதம் காரணமாக இருவர் அடித்து கொலை!



நாமக்கல் அருகே முன் விரோதம் காரணமாக இருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. 
நாமக்கல் அடுத்த கீரம்பூர் அருகேயுள்ள ஆண்டிப்பட்டிபுதூரில் உள்ள அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருக்கும் எதிரே வசித்து வரும் அண்ணாதுரை (எ) முத்துசாமி என்பவருக்கும் பல மாதங்களாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அண்ணாதுரையின் மனைவி கடந்த மாதம் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதற்கு பழனிசாமி தான் காரணம் என முடிவு செய்த அண்ணாதுரை, அவரது நண்பர் ரவியுடன் பழனிசாமியின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற பழனிசாமியின் குடும்பத்தினர், ஹாலேபிலாக் கற்களை கொண்டு சரமாரியாக தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பரமத்தி காவல் துறையினர் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதனையடுத்து பரமத்தி காவல்நிலையத்தில் சரண் அடைந்த  பழனிசாமி மற்றும் அவரது  மனைவி சரசு மற்றும் இரு மகன்களான விமல் ஆதித்தியன், விக்ரம் ஆதித்தியனை  ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.