September 27, 2016
ராகுல்காந்தி மீது காலணி வீசப்பட்ட சம்பவம்: ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க மீது நான் கண்டு அஞ்சப்போவதில்லை ராகுல்காந்தி
உத்தரபிரதேத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மீது காலணி வீச்சப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு முன்னோட்டமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விவசாயிகளை நேரில் சந்திக்கும் பேரணி ஒன்றை, மாநிலம் முழுவதும் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் சீதாப்பூரியில் திறந்தவெளி வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் ராகுல்காந்தியை நோக்கி காலணியை வீசினார். இருப்பினும் அந்த காலணி, ராகுல்காந்தி மீது படாமல், அவர் சென்ற வாகனத்திற்கு விழுந்தது.
இதனையடுத்து காலணியை வீசிய இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து ராகுல் காந்தி கூறியதாவது:
“இது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினரின் செயல் ஆகும், இதைப்போல தாக்குதல்களை கண்டு அஞ்சப்போவதில்லை, என்னுடைய பிரச்சாரம் தொடரும்”.
சமீபத்தில் ஆம் ஆத்மியின் தலைவர்களுள் ஒருவரான மனீஷ் சிசோடியா மீது மை தாக்குதல் நடந்தது, மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் மீதும் இதே போல தக்குதல்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
ராகுல்காந்தி மீது காலணி வீசப்பட்ட சம்பவம்: ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க மீது நான் கண்டு அஞ்சப்போவதில்லை ராகுல்காந்தி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.