September 25, 2016
குடும்ப வறுமை காரணமாக விபரீத முடிவு!
திருவள்ளூர் அருகே குடும்ப வறுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணலி சின்ன சேக்காடு பகுதியை சேர்ந்தவர் வேதகிரி. இவரது மனைவி ஜோதி. மகள்கள் ஸ்ரீபா, ஜெபக்கனி. வேதகிரிக்கு பார்வை குறைபாடு இருந்ததால் கடந்த 7 ஆண்டுகளாக அவர் வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஸ்ரீபா வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் குடும்பம் வறுமையில் தவித்ததால், வீட்டில் இருந்த வேதகிரி, ஜோதி, ஜெபக்கனி ஆகியோர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மணலி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப வறுமை காரணமாக விபரீத முடிவு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.