Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 7, 2016

உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து நடக்காத கர்நாடக அரசு!



உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், காவிரியில் வெறும் 10 ஆயிரம் கன அடி நீரை மட்டுமே கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.

காவிரியில் தினமும் 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு நீர் திறக்குமாறு கர்நாடகாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இந்நிலையில், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீரை மட்டும் கர்நாடக அரசு இன்று திறந்துவிட்டுள்ளது. இதனால், தமிழக விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழக எல்லையில் பதற்றம்:

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்னட அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால், கர்நாடக - தமிழக எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி, கர்நாடக அரசு வழங்க வேண்டிய காவிரி நீரை பெற்றுத் தரக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், 15 ஆயிரம் கன அடி வீதம், தொடர்ந்து 10 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கக் கூடாது என வலியுறுத்தியும் கர்நாடகாவின் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மாண்டியா மாவட்டத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி பிரச்னையில் கர்நாடக அரசின் செயல்பாடு திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்றும்,  விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதில் கர்நாடக அரசுக்கு அக்கறையில்லை என்று கூறி  முதலமைச்சர் சித்தராமையாவின் பேனர்களை கிழித்து தங்களின் எதிர்ப்பை கன்னட விவசாயிகள் அமைப்பினர் வெளிப்படுத்தினர்.

காவிரியாற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் மட்டூர் என்ற பகுதியில், கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் டயர்களை எரித்தும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியும் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னட அமைப்புகளின் போராட்டத்தால், பெங்களூரில் தமிழ் திரைப்படங்கள் வழக்கமாக திரையிடப்படும் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. சில இடங்களில், தமிழ் திரைப்படங்களின் போஸ்டர்களை எரித்து, கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.