September 1, 2016
ஆசைக்கு இணங்க அழைத்த ஆசிரியரை வெட்டிக்கொன்ற தம்பதிகள் கைது!
ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஒருவரை தம்பதிகள் சேர்ந்து வெட்டிக்கொன்றுள்ளனர். இந்த நம்பவம் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே நடந்துள்ளது.
பெரிய நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (67). கடந்த திங்கள் கிழமை இவர் அவரது வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இந்த மரணம் குறித்து காவல்துறையில் மாணிக்கத்தின் மகன்கள் புகார் அளித்தனர்.
வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த காவல்துறை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த விஜயன் (22) மற்றும் அவரது மனைவி விமலா (25) ஆகியோரை கொலை செய்ததாக கைது செய்தனர்.
கொலை குறித்து விஜயன் அளித்த வாக்கு மூலத்தில், மாணிக்கத்திடம் எனது மனைவி விமலா வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். வட்டிப் பணம் கொடுக்க அவரது வீட்டுக்குச் சென்ற போது, ஆசைக்கு இணங்க அழைத்தார்.
இதனை கண்டித்த பின்னரும் மாணிக்கம் எனது மனைவிக்கு அடிக்கடி செல் போனில் செக்ஸ் டார்ச்சர் செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் வீட்டுக்கு அழைத்தார். நானும் என் மனைவியும் அவர் வீட்டுக்கு சென்றோம். என் மனைவியை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு, நான் உள்ளே சென்று அவரை கொலை செய்தேன். இது என் மனைவிக்கு தெரியாது என்று கூறினார்.
ஆனால் காவல் துறை தரப்பில் கூறும் போது கொல்லப்பட்ட மாணிக்கத்திடம் இருந்து, விமலா ரூ.2000 கடனாக வாங்கியுள்ளார். இதனால், விமலாவை, மாணிக்கம் அடிக்கடி வீட்டுக்கு அழைத்து உல்லாசம் அனுபவித்துள்ளார்.
இந்த சம்பவம் விஜயனுக்கு தெரியவர தனது மனைவி விமலா உடன் மாணிக்கத்தின் வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்து பின்னர் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து, மாணிக்கத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ததாக கூறினர்.
ஆசைக்கு இணங்க அழைத்த ஆசிரியரை வெட்டிக்கொன்ற தம்பதிகள் கைது!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 01, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 01, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.