September 4, 2016
விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் சுமார் ஆயிரம் கோடி அளவிலான பணத்தை கடனாக பெற்றுள்ளார். கடனை திருப்பி செலுத்தாததால் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வரும், விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வருகின்றன.
இந்நிலையில், மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இதுதொடர்பான வழக்கில் விஜய் மல்லையா விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடபட்டிருந்தது. விஜய் மல்லையா ஆஜராகாததால் அவர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை மும்பை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இதே போல், கிங்ஃபிஷர் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் அகர்வாலுக்கும் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறக்கப்பட்டுள்ளது
விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 04, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 04, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.