September 1, 2016
பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய நபரை உடனடியாக கைது செய்யக் கோரி காவல் நிலையம் முற்றுகை!
இளம் பெண்ணை தாக்கி தற்கொலைக்கு தூண்டிய இளைஞரை கைது செய்ய கோரி விருத்தாசலம் காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூதாமூர் பகுதியில் வசித்து வரும் புஷ்பலதா, தனியார் மருத்துவ மனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றிரவு பணிமுடித்து வீடுதிரும்பும் போது, அதே பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவர்,புஷ்பலதாவை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டியதாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்ததால் புஷ்பலதா தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். தற்கொலைக்கு தூண்டிய நபரை உடனடியாக கைது செய்யக் கோரி பூதாமூர் பகுதி பொது மக்கள் விருத்தாசலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்
பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய நபரை உடனடியாக கைது செய்யக் கோரி காவல் நிலையம் முற்றுகை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 01, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 01, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.