Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 14, 2016

ஒரு சொட்டு காவிரி நீர் கூட திறந்து விடக்கூடாது: முன்னாள் முதல்வரின் சர்ச்சை கருத்து



காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழர்கள் மீது தாக்குதல், தமிழக உடமைகள் மீது தாக்குதல் என வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளன.

இதையடுத்து பெங்களூரு நகரில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. ஆனாலும் கலவரம் அடங்கியபாடில்லை. நேற்று மாலை தமிழகத்தை சேர்ந்த கே.பி.என் நிறுவனத்தை சேர்ந்த 50 சொகுசு பேருந்துகளுக்கு கன்னட அமைப்பினர் தீவைத்து எரித்தனர்.

இந்நிலையில் அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் சித்தராமையாவுடன் நாங்கள் இருக்கிறோம். இனிமேல் தமிழகத்திற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட திறந்து விடக்கூடாது என்றார்.

குமாரசாமியின் இந்த கருத்து பிர்சனையை மேலும் அதிகரிக்கவே வழி செய்வதாக சமூக வலைதளங்களில் பலர் தெரிவித்துவருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.