September 19, 2016
சுவாதி கொலை – உண்மையான குற்றவாளி குறித்து வெளியான பரபரப்பு தகவல்
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், உண்மையான குற்றவாளி அல்ல, என்று பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழச்சி என்பவர், பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், திலீபன் மகேந்திரன், என்பவர், சுவாதி கொலை வழக்கின் உண்மையான குற்றவாளிகள் பற்றிய ஆதாரங்களை விரைவில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே தேசியக் கொடியை எரித்ததற்காக தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள திலீபன் மகேந்திரன், சுவாதியை வெட்டிக் கொன்றது ராம்குமார் இல்லை எனவும், இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ள உண்மையான குற்றவாளி முத்தப் பேட்டை சேர்ந்த பாஜக மாநில துணை தலைவரான கருப்பு முருகானந்தம் தான் எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த கருப்பு முருகானந்தம்,தன் மீது அவதூறு பரப்பி வரும் திலீபன் மகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளித்தார்.இதனை தொடர்ந்து திலீபன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவர், “சிறையில் என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர்களோடு சேர்த்து அடைத்து வைத்திருந்தார்கள்.சித்திரவதையும் செய்தார்கள்.ஆனால் இதற்கெல்லாம் நான் பின்வாங்கிவிட போவதில்லை.சுவாதி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள உண்மையான குற்றவாளிகளை கூடிய விரைவில் அம்பலப்படுத்துவேன்.” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துகொண்டிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சுவாதி கொலை – உண்மையான குற்றவாளி குறித்து வெளியான பரபரப்பு தகவல்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.