Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 24, 2016

ராம்குமார் பிரேதப் பரிசோதனை தொடர்பாக திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்



ராம்குமார் பிரேதப் பரிசோதனை தொடர்பாக வரும் திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக ராம்குமார் தந்தை பரமசிவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம்குமார் பிரேதப் பரிசோதனை தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 நீதிபதிகளும் வெவ்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர். இதனையடுத்து வழக்கை 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றக்கோரி, ராம்குமார் தந்தை தரப்பு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், வழக்கு தொடர்பான விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து, ராம்குமார் பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்கக் கோரி, சம்பந்தப்பட்ட நீதிபதிகளை ராம்குமார் தந்தை தரப்பினர் அணுகினர். இதில் ராம்குமார் தந்தை தரப்பிடம், நீதிபதி கிருபாகரன் சரமாரி கேள்வி எழுப்பினார். இப்பிரச்னையில், அரசியல் கட்சிகள் தலையிடுவது துரதிருஷ்டவசமானது என்றும், இறந்த உடலுக்கு கண்ணியம் உள்ளது என்றும் நீதிபதி கூறினார்.

மேலும், வரும் 30ம் தேதி வரை, ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய தடை விதித்த நீதிபதி கிருபாகரன், அதுவரை உடலை ராயப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்குமாறும் அறிவுறுத்தினார். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவை 30 ம் தேதிக்குள் பெற்று அக்டோபர் 1ம் தேதிக்குள் பிரேதப் பரிசோதனை செய்து முடிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் ராம்குமார் பிரேதப் பரிசோதனை தொடர்பான வழக்கை தொடர உள்ளதாகவும், அந்த வழக்கில் வழக்குரைஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதாட உள்ளதாகவும் ராம்குமார் தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.