September 26, 2016
கேரள சட்டப்பேரவையை முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்வதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, கேரள சட்டப்பேரவையை முற்றுகையிட்டு, இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவில் சுயநிதிக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்வது தொடர்பாக, மாநில அரசுக்கும், சுயநிதிக் கல்லூரி நிர்வாகங்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரள இடதுசாரி அரசைக் கண்டித்து அம்மாநில சட்டப்பேரவையை முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
கேரள சட்டப்பேரவையை முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.