Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 26, 2016

ராம்குமார் மரணம் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை…நீதிபதி சொல்கிறார்..!



சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறைச்சாலையில் அடைக்கப்படிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராம்குமாரின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு கூறுகையில்,
ராம்குமார் மரணத்தில் சிறை அதிகாரிகள்தான் விளக்கம் தர வேண்டும். சிறையில் பாதுகாப்பை மீறி எப்படி இப்படி ஒரு சம்பவம் நடைபெற முடியும்? சிறைக்கு வரும் முன்பு பெரும்பாலும் அனைவரும் நலமாகவே உள்ளனர். ஆனால் சிறைக்கு வந்ததும் அவர்கள் மரணமடையும் அளவுக்குப் போகிறார்கள்.
வயர்கள் எல்லாம் வெளியில் தெரியும்படி எந்த சிறையிலும் இருக்காது. சுவர்களுக்குள் பதிக்கப்பட்ட நிலையில்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது வயரை எப்படி எடுத்து கடிக்க முடியும். இது திட்டமிட்டு செய்தது போல தெரிகிறது.  வேறு வழியே இல்லை அவர்களுக்கு எங்கிருந்தோ அவர்களுக்கு கட்டளை வந்திருக்கிறது. வெளியே வந்து ராம்குமார் வாய் திறந்தால் பலர் பாதிப்படைவார்கள்.மேலும் சீக்கிரமே முடிக்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பதாக தெரிகிறது என்று நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.