Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 28, 2016

​ராம்குமாரின் தந்தை மேல்முறையீடு!



ராம்குமார் பிரேதப் பரிசோதனையில் தங்களது தரப்பு மருத்துவரை சேர்க்க வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் ராம்குமாரின் தந்தை மேல்முறையீடு செய்துள்ளார்.

மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து ராம்குமாரின் பிரேதப் பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் ஒருவரை அனுமதிக்கக்கோரி, ராம்குமாரின் தந்தை பரமசிவம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்ததில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, வழக்கு 3வது நீதிபதி கிருபாகரனிடம் மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் பிரேதப் பரிசோதனையின் போது இருக்கலாம் என்று உத்தரவிட்டார்.

இதனை ஏற்க மறுத்த ராம்குமார் தந்தை பரமசிவம், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுலிடம், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மனு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு மனுதாரர் தரப்பை அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, தனது மகன் பிரேத பரிசோதனையில், தனியார் மருத்துவரையும் சேர்க்க உத்தரவிடக்கோரி, ராம்குமார் தந்தை பரமசிவம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.