September 7, 2016
ரத்தத்தை தருவோம்... சொட்டு காவிரி நீரை தர முடியாது... இது கர்நாடகா விடுதலைச் சிறுத்தைகள்
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதற்கு கர்நாடகா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும்; உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள அளவே போதுமானது அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று அறிக்கை ஒன்றில் வலியுறுத்தி இருந்தார்.
மேலும் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்றும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.ஆனால் கர்நாடகாவில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரோ தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா அரசு காவிரி நீரை திறந்துவிட்டதற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள அம்மாநில விடுதலைச் சிறுத்தைகள், ரத்தத்தை வேண்டுமானால் தருவோமே தவிர சொட்டு காவிரி நீரையும் தமிழகத்துக்கு தரமாட்டோம் என முழங்கி வருகின்றனர்
ரத்தத்தை தருவோம்... சொட்டு காவிரி நீரை தர முடியாது... இது கர்நாடகா விடுதலைச் சிறுத்தைகள்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 07, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.