Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 25, 2016

கணவன் வெட்டிக் கொலை : மனைவி நஞ்சருந்திய நிலையில் மீட்பு



மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள இசை நடனக் கல்லூரி வீதி, நொச்சிமுனை, கல்லடிப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சமபவம் நேற்று (07) இரவு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொலை செய்யப்பட்ட நபர் வெள்ளத்தம்பி மகேஸ்வரன் (வயது 26) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவரது மனைவியான சிந்து மகேஸ்வரன் (வயது 26) என்பவர் நஞ்சு அருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தம்பதியினர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பதிவுத் திருமணம் செய்து கொண்டு கடந்த மூன்று மாதங்களுக்குள்ளாகத்தான் திருமணம் செய்து கொண்டு குடும்பமாக வாழத் தொடங்கியதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், இது குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதா? என பல்வேறு மட்டங்களில் பொலிஸார் விசாரணைகளைத் துரிதப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.