Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 11, 2016

மீன் தலை கறி



என்னென்ன தேவை?

மீன் தலை - 4
நல்லெண்ணை - 5 டீஸ்பூன்
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - தேவையான அளவு
சாம்பார் வெங்காயம் - 10
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 1
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 1/2 கப்,
புளி - தேவையான அளவு




எப்படிச் செய்வது?

முதலில் சாம்பார் வெங்காயம் மற்றும் தக்காளியை வெட்டவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் வெந்தயம் சேர்க்க பின்  அதில் கறிவேப்பிலை, சாம்பார் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும், அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வேக விடவும். மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும், அதில் தடித்த புளி கரைசல் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை சமைக்கவும். இப்போது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும், அதில் மீன் தலைகளைப் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். மீன் அரை வேக்காட்டில் இருக்கும்போது தேங்காய் பேஸ்ட் சேர்த்து எண்ணெய் மேலே மிதக்கும் வரை சிம்மில் வைத்து சமைக்கவும். சுவையான மீன் தலை கறி தயார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.