September 11, 2016
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மறுசீராய்வு மனு
10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி கர்நாடக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 6ம் தேதி நள்ளிரவு முதல் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கர்நாடக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக், அரசு வக்கீல் ரகுபதி, மோகன் கத்தார்கி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் வீட்டுக்கு நேற்று இரவு சென்று மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
அதில், 5ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வீதம் 6 நாட்களுக்கு திறந்துவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் கர்நாடக மாநிலத்தில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மறு பரிசீலனை செய்து திருத்தம் செய்ய வேண்டும் என்றும், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மறுசீராய்வு மனு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 11, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 11, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.