September 7, 2016
தக்காளி மற்றும் வெள்ளிரிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை!
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் காவல் கிணறு மார்க்கெட்டில் தக்காளி மற்றும் வெள்ளிரிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் வள்ளியூர், ராதாபுரம், பணகுடி, வடக்கன்குளம்,பழவூர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அதிகளவு தக்காளி மற்றும் வெள்ளரி போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர். விளைபொருட்களை காவல்கிணறு தினசரி சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சிலமாதங்களாக தக்காளி மற்றும் வெள்ளிரி உற்பத்தி அதிகமாக இருப்பதால் வெள்ளரிக்காய் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய்க்கும், தக்காளி கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். எனவே, வாழ்வாதாரத்தை பாதுகாக்க, அரசு பதப்படுத்தும் கிட்டங்கி அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தக்காளி மற்றும் வெள்ளிரிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 07, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.