September 27, 2016
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை. காவல்துறை எச்சரிக்கை
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் பூரண குணம் அடைந்துவிட்டதாகவும், அவருக்கு பூரண ஓய்வு தேவை என்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துமனை அறிவித்தது.
இந்நிலையில் முதல்வரின் உடல்நிலை குறித்து திடீரென கடந்த சில மணி நேரங்களாக வதந்தி ஒன்று பரவி வருவதால் இவ்வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.
முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை. காவல்துறை எச்சரிக்கை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.