Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 27, 2016

கள்ள தொடர்பு காரணமாக கணவனைக் கொன்று பைக்கில் எடுத்து சென்ற மனைவி


கணவனைக் கொன்று பைக்கில் எடுத்து சென்ற மனைவியை போலீசார் விரட்டி சென்று பிடித்த சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் ஐதராபாத் சாலையில் பைக்கில் சென்ற மூவரைப் பார்த்து கான்ஸ்டபிள்கள் நாகேஸ்வர ராவ், மகேந்திரா இருவருக்கும் சந்தேகம் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த பைக்கை நிறுத்த கான்ஸ்டபிள்கள் இருவரும் முயற்சி செய்தனர். ஆனால் அந்த பைக் நிற்காமல் சென்று விட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கான்ஸ்டபிள்கள் இருவரும் அந்த பைக்கை விரட்டி சென்று மடக்கினர்.

பைக்கில் சென்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பைக்கில் சென்ற பெண்ணின் பெயர் பிரவல்லிகா மெண்டம் (25). அவரது கணவர் பெயர் புல்லையா மெண்டம். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் இருவரும் வசித்து வந்துள்ளனர்.

பிரவல்லிகாவுக்கு, 16 வயதே ஆன உறவுக்கார பையனுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை உறவினர்கள் கண்டித்ததால் அண்மையில் கணவன்-மனைவி இருவரும் ஐதராபாத் பகுதிக்கு குடிவந்தனர்.

இந்நிலையில், தலையில் பலத்த காயங்களுடன் புல்லையாவின் உடலை சனிக்கிழமை இரவு பிரவல்லிகா மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றபோது சிக்கியுள்ளார். புல்லையாவை அடித்து கொலை செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் புல்லையா மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.