Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 25, 2016

கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: தண்ணீரில் தத்தளிக்கும் கிராமங்கள்!



கர்நாடக அரசு ஒருபுறம் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து வரும் நிலையில், மறுபுறம் மழை வெள்ளத்தால் அம்மாநிலத்தின் சில பகுதிகள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன.

கர்நாடக மாநிலத்தின் பிதார், குல்பர்கா மாவட்டங்களில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிதார் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலையிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை வரை, 24 மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இதனால் அம்மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 17 பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

சுமார் 150 கிராமங்கள் மழை நீரால் சூழப்பட்டு, தனித் தீவுகளாகக் காட்சியளிக்கின்றன. பிதார் நகரின் குடியிருப்பு பகுதிகளையும், சாலைகளையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வானிலை தகவல் மையம் தெரிவித்துள்ள அறிக்கையில், செப்டம்பர் 22 முதல் 26 வரை பெங்களூர் நகரில் மிதமான மழை பெய்யும் எனவும், எனினும் கனமழை என்பது அக்டோபர் மாத இடையில் பெய்யும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.