September 28, 2016
தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர் - கைது செய்யப்பட்ட காதல் மன்னன் பகீர்
சென்னையில் இளம்பெண்களை காதலித்து நெருக்கமாக பழகி அவர்களின் ஆபாச படங்களை முகநூலில் வெளியிட்ட காதல் மன்னனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜஸ்ரீ (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாயார் ராஜேஸ்வரி சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
ஒரு தலைக்காதல்
எனது மகள் பட்டப்படிப்பு படித்து உள்ளார். அவரை மயிலாப்பூரை சேர்ந்த சாமுவேல் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து உள்ளார். காதலை சொல்லி அடிக்கடி பின்தொடர்ந்து வந்துள்ளார். எனது மகள் அவரது காதலை ஏற்கவில்லை. திடீரென்று அந்த வாலிபர் தனது முகநூலில் எனது மகளின் புகைப்படத்தை கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளார்.
இதுபோல ஏராளமான பெண்களை காதலித்து நெருக்கமாக பழகி அந்த இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்களையும் தனது முகநூலில் வெளியிட்டுள்ளார். அவர் மீது சட்டப்பூர்வ நட
வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
வழக்குப்பதிவு
இந்த புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் குப்புசாமி ஆகியோர் மேற்பார்வையில் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
புகார் கூறப்பட்ட சாமுவேல் மயிலாப்பூர் சிவசாமி தெருவை சேர்ந்தவர். என்ஜினீயரிங் படித்தவர். ஆனால் சில பாடங்களில் ‘பெயில்’ ஆகி உள்ளார். இவரது தாயார் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தந்தை ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி. தற்போது அவர் கார் வாங்கி விற்கும்
நிறுவனம் நடத்தி வருகிறார்.
பெற்றோருக்கு ஒரே மகன்
சாமுவேல் பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டு உள்ளார். அவர் கேட்டதையெல்லாம் பெற்றோர் மறுக்காமல் செய்து கொடுத்து உள்ளனர்.
தந்தை கார் விற்பனை நிறுவனம் நடத்தி வருவதால் பல சொகுசு கார்களில், சாமுவேல் வலம் வந்து உள்ளார். தியேட்டர் அதிபர் ஒருவரது மகன் உள்பட இளைஞர் பட்டாளமே சாமுவேலுக்கு நண்பர்களாக உள்ளனர்.
காதல் விளையாட்டு
செல்வம், அந்தஸ்து இருந்ததால் சாமுவேலின் வாழ்க்கை தப்பான பாதைக்கு சென்றுள்ளது. முகநூல் மூலம் தொடர்புகொண்டு அழகான இளம்பெண்களுக்கு, வலை விரித்துள்ளார். முதலில் காதலிப்பார். பின்னர் அந்த பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி, உல்லாசத்தில் ஈடுபடுவார்.
உல்லாசத்தில் ஈடுபடும் காட்சிகளை மறைமுகமாக தனது செல்போன் மூலம் படம் எடுத்து, இணையதளங்களில் வெளியிட்டு உள்ளார். முகநூலிலும் இவரது லீலைகளின் படங்கள் ஏராளமாக உள்ளதாக கூறப்படுகிறது. காதல் மன்னனாக வலம் வந்துள்ளார்.
போலீசார் தேடுவதை அறிந்ததும், தனது நண்பர்களோடு பெங்களூருவுக்கு தப்பி ஓடிவிட்டார். அவரது பெற்றோரும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு தலைமறைவு ஆகிவிட்டனர்.
போலீஸ் அதிகாரி மூலம்...
சாமுவேலின் நெருங்கிய உறவினர் ஒருவர் தமிழக போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார். அவர் சாமுவேலை காப்பாற்றுவதற்கு முயற்சித்து உள்ளார். சாமுவேலை விசாரணைக்கு ஆஜராக சொல்லுங்கள், விசாரணை நடத்திவிட்டு அவரை விட்டுவிடுகிறோம் என்று சிந்தாதிரிப்பேட்டை பெண் போலீசார் உறுதி அளித்தனர். இதை நம்பிய போலீஸ் அதிகாரி நேற்றுமுன்தினம் இரவு சாமுவேலை சென்னைக்கு வரவழைத்தார். சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாமுவேல் விசாரணைக்கு ஆஜரானார்.
கைது
போலீசார் சாமுவேலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பல பெண்களோடு உல்லாசத்தில் ஈடுபட்டு, அவர்களின் ஆபாச படங்களை முகநூலில் வெளியிட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர். வலுவான ஆதாரங்கள் இருந்ததால் சாமுவேல் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில் அவரால் பாதிக்கப்பட்ட சென்னை அண்ணாநகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சாமுவேலிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.
சிறையில் அடைப்பு
காதல் மன்னன் சாமுவேல் நேற்று மாலை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
‘கடலில் குளிக்க வைத்து அழகை ரசித்தேன்’ இளம்பெண்களை வளைத்தது எப்படி? கைதான காதல் மன்னன் வெளியிட்ட தகவல்
இளம்பெண்களை வளைத்து தனது காதல் வலையில் விழ வைத்தது எப்படி? என்று காதல் மன்னன் சாமுவேல் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். வாக்குமூலம் விவரம் வருமாறு:–
கடந்த 2 வருடங்களாக நான் பெண்களோடு பழக ஆரம்பித்தேன். ‘முகநூல்’ மூலம் தான் பெண்களோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. ‘முகநூல்’ மூலமே எனது காதலை பெண்களிடம் தெரிவித்தேன். காதலில் பெண்கள் விழுந்ததும், அடுத்து திருமண ஆசை காட்டுவேன். திருமண ஆசை காட்டியதும், பெண்கள் என்னோடு நெருக்கமாக பழகுவார்கள்.
கடலில் குளிக்க வைத்து...
இதை பயன்படுத்தி எனது இதய ராணிகளை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளுக்கு அழைத்து செல்வேன். அங்கே கடலில் குளிக்க வைத்து பெண்கள் அழகை ரசித்தேன்.
இவ்வாறு பெண்களை வளைத்து அடுத்தகட்டமாக உல்லாசத்தில் ஈடுபடுவேன். ரகசியமாக செல்போன்கள் மூலம் உல்லாச காட்சிகளை படம்பிடிப்பேன். முதலில் எனது வலையில் விழுந்தது வேலூரை சேர்ந்த அழகான பட்டதாரி பெண் ஆவார். அடுத்து மயிலாப்பூரை சேர்ந்த கோடீஸ்வரரின் மகளும் எனக்கு இன்ப விருந்து அளித்தார். 4 பெண்களிடம் மட்டுமே நான் தவறாக நடந்து உள்ளேன். அந்த காட்சிகளை தான் ஆபாச படங்களாக இணையதளங்களில் எனது எதிரிகள் வெளியிட்டு விட்டனர். ஆனால் 10–க்கும் மேற்பட்ட பெண்களிடம் நான் பழகி இருக்கிறேன். ஆனால் என்னோடு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த மாணவியை உயிருக்கு உயிராக காதலித்தேன்.
தானாக விரும்பியே...
அந்த மாணவியையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தேன். அந்த கனவு இனிமேல் நிறைவேறாது. பெண்களோடு ஏற்பட்ட பழக்கத்தால் படிப்பில் கோட்டை விட்டு, என்ஜினீயரிங் படிப்பை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை. என்னோடு நெருக்கமாக பழகிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர். நான் யாரையும் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை.
இவ்வாறு சாமுவேல் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
‘தண்டனை வாங்கி கொடுங்கள்’
சாமுவேல் மீது பெண்களை மானபங்க படுத்துதல், ஆபாச படங்கள் எடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு போட்டு உள்ளனர். சாமுவேலின் பெற்றோர், ‘‘தவறான பிள்ளையை நாங்கள் பெற்றுவிட்டோம். எனது பிள்ளை செய்த தவறுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள்’’ என்று தெரிவித்ததாக பெண் போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் விசாரணைக்கு சாமுவேல் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். 4 பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் ‘வாட்ஸ்–அப்’பில் வெளியாகி உள்ளது. அவரது செல்போனிலும், அந்த காட்சிகள் பதிவாகி உள்ளன. இவற்றையெல்லாம் போலீசார் ஆதாரமாக வைத்துள்ளனர்.
Thanks To Daily Thanthi 28.09.2016
தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர் - கைது செய்யப்பட்ட காதல் மன்னன் பகீர்
Reviewed by மறத்தமிழன்
on
September 28, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
September 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.